முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து துணை ஜனாதிபதி பெருமிதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாய வேலையில் ஈடுபட்ட புகைப்படங்களை வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த கிராமமான எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் விவசாயிகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார். சிலுவம்பாளையம் ஊர் மைதானத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடியதோடு கிராமியக் கலைகளும் நிகழ்த்தப் பட்டன. அதனைத் தொடர்ந்து ஊரைச் சுற்றியுள்ள விவாசயத் தோட்டங்களைப் பார்வையிட்டார். அங்குள்ள விவசாயிகளுடன் தொழில் நுணுக்கங்களையும் பகிர்ந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கும்போது, தான் அடிப்படையில் ஒரு விவசாயி என்பதைப் பெருமிதத்தோடு தெரிவித்துக் கொண்டார். மேலும் நெற்கதிர்களை அறுவடை செய்யும் விதம் குறித்து விளக்கி, வயலில் இறங்கி சில கதிர்களை அறுத்தும் காட்டினார். அந்தப் புகைப்படங்கள் தமிழக ஊடகங்கள் மட்டுமல்லாது சமூக வலைத் தளங்களிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி விவசாயத்தில் ஈடுபட்டது போன்ற புகைப்படங்களைத் தற்போது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில் ‘தமிழக முதலமைச்சர் ஒரு விவசாயியாக வயலில் இறங்கி வேலை செய்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பழனிசாமி அவர்கள் ஒரு போதும் தனது ஆதாரத் தொழிலான விவசாயத்தை மறக்கவில்லை. இத்தகைய செயல்கள் மக்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கக் கூடியதாக அமைகிறது. இன்றைய சூழலில் விவசாயத்தை லாபகரமானதாகவும் தொடர்ந்து செய்யக்கூடிய தொழிலாகவும் மாற்ற வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments