காதலரை கைப்பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகை.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் சேர்ந்து விட்டாலே வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள் என்பது மட்டும் இன்றி விஜய் டிவியில் உள்ள ஒருவருடன் திருமணமும் நடந்து விடும் என்று காமெடியாக கூறப்படுவது உண்டு.
ஏற்கனவே விஜய் டிவியில் பல நட்சத்திர ஜோடிகள் இணைந்துள்ளனர் என்பதும் குறிப்பாக செந்தில் - ஸ்ரீஜா, சஞ்சீவ் - ஆல்யா மானசா உட்பட பலரும் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் தெரிந்தது
அந்த வகையில் ’தவமாய் தவமிருந்து’ என்ற சீரியலில் நடித்த பிரிட்டோ மற்றும் சந்தியா ராமச்சந்திரன் ஆகிய இருவரும் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில் தற்போது பிரிட்டோ மற்றும் சந்தியா ராமச்சந்திரன் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் பல விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருமண வீடியோவை சந்தியா ராமச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் விஜய் டிவியின் நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்துக்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments