உலகின் அதிக பார்வையாளர்களை பெற்ற யூடியூப் வீடியோ திடீர் மாயம்

  • IndiaGlitz, [Wednesday,April 11 2018]

யூடியூப் இணையதளத்தில் உலகிலேயே அதிக பார்வையாளர்கள் பார்த்த வீடியோக்கள் Vevo யூடியூப் அக்கவுண்டில்தான் உள்ளது. இதில் உள்ள மியூசிக் வீடியோக்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த பக்கத்தில் உள்ள சில முக்கிய யூடியூப் வீடியோக்கள் திடீரென மாயமாய் மறைந்துவிட்டன. ஒருசில வீடியோக்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் மாற்றப்பட்டுள்ளன. இவை அனைத்து ஹேக்கர்களின் கைவரிசையாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஹேக்கர்களின் கைவரிசையால் மாயமாய் மறைந்த வீடியோக்களில் உலகின் அதிக பார்வையாளர்களை பெற்ற லூயிஸ் ஃபோன்சி மற்றும் டாடி யாங்கியின் 'டெஸ்பாசிடொ' என்ற வீடியோவும் அடங்கும். 

மேலும் கிரிஸ் பிரெளன், ஷகிரா, டிஜே ஸ்னேக், செலினா கோம்ஸ், டிரேக், டெய்லர் ஷிப்ட் போன்றவர்களின் மியூசிக் வீடியோக்களும் மாயமாய் மறைந்துள்ளது யூடியூப் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த வீடியோக்களை மீண்டும் மீட்டெடுக்க கூகுள் உதவியுடன் Vevo முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.