'வேட்டையன்' 'விடாமுயற்சி' அப்டேட்.. ரஜினி, அஜித் ரசிகர்கள் குஷி..!

  • IndiaGlitz, [Tuesday,August 20 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ‘வேட்டையன்’ மற்றும் அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ ஆகிய இரண்டு படங்களையும் தயாரித்து வரும் லைக்கா நிறுவனம் இரண்டு படங்களின் அப்டேட்களை அறிவித்துள்ளதால் ரஜினி, அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ’மனசிலாயோ’ என்ற பாடல் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலை சுப்பு என்பவர் எழுதியுள்ளார் என்பதும் இவர் ’ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ’தலைவர் நிரந்தரம்’ பாடலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அஜித் நடித்த வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 4.33 மணிக்கு அறிவிக்கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது. அனேகமாக இந்த படம் தீபாவளி ரிலீஸ் என்ற அறிவிப்பு தான் இன்று மாலை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.