'சட்டம் ஆளுக்கு ஏத்த மாதிரி வளையும் நெளியும்'.. 'வேட்டையன்' அன்சீன் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் அன்சீன் காட்சிகள் படக் குழுவினரால் வெளியிடப்பட்டு வருகிறது என்பதைப் பார்த்து வருகிறோம். ஏற்கனவே கடந்த சில நாட்களில் இரண்டு அன்சீன் வீடியோக்கள் வெளியான நிலையில், தற்போது இன்னொரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் இருக்கும் இந்த வீடியோவில், ரஜினி மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் அமிதாப் பச்சனை பார்த்து, அவர் வீட்டில் தங்கி இருக்கும். என்கவுண்டரில் சுடப்பட்ட அம்மா மற்றும் தங்கை ஆகிய இருவரையும் பார்த்து மஞ்சு வாரியர் ஆறுதல் கூறுகின்றனர். அதன் பிறகு ரஜினி மற்றும் அமிதாப் இடையே உரையாடல் நடக்கிறது.
அந்த உரையாடலில், "கோர்ட்டில் இந்த கேஸ் நிக்காது, என்று அமிதாப் கூற, 100 சதவீதம் கிரிமினல் என்று தெரிந்தும் அவர்களை தண்டிக்க முடியாது. அப்படித்தானே? நான் பழைய அதியனாக இருந்திருந்தால், இந்நேரம் இவங்க எல்லாரையும் நெத்தியில புல்லட்டைய இறக்கியிருப்பேன் என்று சொல்கிறார்.
அதற்கு, "அமிதாப், அதிகாரத்தை நீங்கள் கையில் எடுத்தால் கிரிமினல்கள் சாவாங்க. ஆனால் அதே நேரத்தில் அப்பாவிகளும் சாகுவாங்க. எனவே, சட்டப்படி தான் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்," என்று கூறுகிறார்.
"உங்கள மாதிரி நேர்மையான அதிகாரிகள் 10 சதவீதம் கூட இருக்க மாட்டார்கள். சட்டம் தான் கிரிமினல்களை தண்டிக்க வேண்டும்," என்று கூறுகிறார். அதற்கு ரஜினி, "இப்போ காலம் மாறிப்போச்சு சார். இப்போ சட்டம் ஆளுக்கு ஏத்த மாதிரி வளையும், நெளியும், சலாம் போடும். பணம், அதிகாரம், அரசியல் செல்வாக்கு என சட்டத்துக்கு மேல் இருக்கிறவங்களை சட்டம் தண்டிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்று கேட்கிறார். அதற்கு, "குற்றவாளிகளை சட்டம் மட்டுமே தண்டிக்கணும்," என்று அமிதாப் உறுதிப்படச் சொல்கிறார். இத்துடன் முடியும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
When a Titan speaks, even the fiercest hunter listens! 🎬 Catch the unseen video from VETTAIYAN 🕶️ where wisdom meets power. 🔥#Vettaiyan 🕶️ #வேட்டையன் 🕶️ #VettaiyanTheHunter 🕶️ https://t.co/JvzITtWPjm
— Lyca Productions (@LycaProductions) October 19, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com