'வேட்டையன்' டிரைலர் ரிலீஸ் எப்போது? ரஜினி ரசிகர்களை குஷியாக்கிய லைகா அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாக்கப்பட்ட ‘வேட்டையன்’ திரைப்படம், படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து, வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் விளம்பரப் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் இசை வெளியீடு முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக, இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வேட்டையன்’ படத்தின் டிரைலர் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்படும் என்று லைக்கா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது. இதனை அடுத்து, ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
‘வேட்டையன்’ திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், டிரைலர் வெளியீட்டுக்குப் பின்னர் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது .
The Target is set! 🎯 The VETTAIYAN 🕶️ trailer is dropping on October 2nd. 🔥 Get ready to catch the prey. 🦅#Vettaiyan 🕶️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran… pic.twitter.com/Qs8w8xJRqH
— Lyca Productions (@LycaProductions) September 30, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments