'வேட்டையன்' ரிலீஸ் தேதி.. 'கூலி' படப்பிடிப்பு தேதி.. ஒரே நாளில் இரண்டு அப்டேட்டுகள்..!

  • IndiaGlitz, [Monday,June 03 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’வேட்டையன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் அக்டோபர் மாதம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இரவு பகலாக பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி அக்டோபர் 10ஆம் தேதி சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை தினத்தின் போது ’வேட்டையன்’ படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளங்களில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 10ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

ஒரே நாளில் ரஜினிகாந்தின் ’வேட்டையன்’ மற்றும் ’கூலி’ ஆகிய இரண்டு படங்களின் அப்டேட் வந்ததை எடுத்து ரஜினி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

More News

'சூர்யா 44' படத்தின் ஃபர்ஸ்ட் ஷாட்.. செம்ம கெட்டப்.. மாஸ் வீடியோவை வெளியிட்ட இயக்குனர்..!

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு அந்தமான் தீவில் இந்த வாரம் தொடங்குவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில்

குளிர்பானத்தில் மயக்க மருந்து.. இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த தமிழ் சினிமா தயாரிப்பாளர் அதிரடி கைது..!

இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய தமிழ் சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணத்திற்கு முன்பு ஒரு ஜாலி ட்ரிப்.. சித்தார்த் - அதிதி எந்த நாட்டில் இருக்கிறார்கள் தெரியுமா?

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி ஆகிய இருவரும் கடந்த மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில்

டூபீஸ் உடையில் அருவியில் குளிக்கும் ராஷ்மிகா மந்தனா..  வீடியோவுக்கு பின் அதிர்ச்சி உண்மைகள்..!

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா டூபீஸ் உடையில் அருவியில் குளிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த வீடியோ போலியான வீடியோ என்றும் டீப்ஃபேக் டெக்னாலஜி

கமல், அர்ஜுன் பட நடிகையை சுற்றி வளைத்து தாக்கிய பெண்கள்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'ஆளவந்தான்' மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த 'சாது' ஆகிய தமிழ் படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்த நடிகையை மும்பையில் பெண்கள் சுற்றி வளைத்து