குறி வச்சா இரை விழணும்.. 'வேட்டையன்' படத்தின் ஒரு வார வசூல் இத்தனை கோடியா?

  • IndiaGlitz, [Thursday,October 17 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியான நிலையில், இந்த படத்தின் ஒரு வார வசூல் குறித்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

மழை காரணமாக இரண்டு நாள் சுமாரான வசூல் செய்த நிலையில், தற்போது மழை நின்று விட்டதால் மீண்டும் வசூல் சூடு பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், ‘வேட்டையன்’ திரைப்படம் ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், லைக்கா நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ’ஜெயிலர்’ திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், அந்த வசூலை ‘வேட்டையன்’ முந்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More News

எதைக் கேட்டாலும் இல்லைங்கிற.. யாருடி நீ? கீர்த்தி சுரேஷின் 'ரிவால்வர் ரீட்டா' டிரைலர்..!

கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்த "ரிவால்வர் ரீட்டா" என்ற திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியான நிலையில், இந்த டீசர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் இன்று.. யார் கெத்து? நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்.. முட்டி மோதும் போட்டியாளர்கள்..

பிக் பாஸ் வீட்டில் யார் கெத்து என்ற நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க் இன்று வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த டாஸ்கில் வெற்றி பெற போட்டியாளர்கள் முட்டி மோதி வரும் காட்சிகள்

'புதிய தொடக்கம்'.. திருமணத்திற்கு பின் நல்ல செய்தி சொன்ன ஹன்சிகா.. குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகை ஹன்சிகாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் அவர் ரசிகர்களுக்கு நல்ல செய்தி ஒன்றை சொல்லியுள்ளார்.

இந்த வாரம் எத்தனை தமிழ் படங்கள்? ஓடிடி ரிலீஸ் குறித்த முழு தகவல்கள்..

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போல, ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் OTTயில் வெளியாகி வருகின்றன

எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன தானம் செய்ய வேண்டும்.?

பிரபல ஜோதிடர் வித்யா கார்த்திக் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், தானம் மற்றும் தர்மம் பற்றியும், ஒவ்வொரு ராசிக்காரரும் செய்ய வேண்டிய தானங்கள் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளார்.