குறி வச்சா இரை விழணும்.. 'வேட்டையன்' படத்தின் ஒரு வார வசூல் இத்தனை கோடியா?

  • IndiaGlitz, [Thursday,October 17 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியான நிலையில், இந்த படத்தின் ஒரு வார வசூல் குறித்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

மழை காரணமாக இரண்டு நாள் சுமாரான வசூல் செய்த நிலையில், தற்போது மழை நின்று விட்டதால் மீண்டும் வசூல் சூடு பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், ‘வேட்டையன்’ திரைப்படம் ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், லைக்கா நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ’ஜெயிலர்’ திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், அந்த வசூலை ‘வேட்டையன்’ முந்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.