'வேட்டையன்' படத்தின் முக்கிய பணி ஆரம்பம்.. ரஜினியை முந்திய பகத் பாசில்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படத்தின் முக்கிய பணி இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த பணியில் பகத் பாசில் கலந்து கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’வேட்டையன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட பணியான டப்பிங் இன்று தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக இந்த படத்தில் ரஜினியுடன் முக்கிய கேரக்டரில் நடித்த பகத் பாசில் தனது பகுதிக்கான டப்பிங் பணியை தொடங்கியுள்ளார்.
ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ’கூலி’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் அந்த படத்தின் முதல் கட்ட பணி முடிவடைந்த உடன் அவர் தனது பகுதிக்கான டப்பிங் பணியை தொடங்குவார் என்றும் அதனை அடுத்து மஞ்சு வாரியர் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களின் டப்பிங் பணிகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
’வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க படக்குழுவினர் இரவு பகலாக பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகிணி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Dubbing for Vettaiyan 🕶️ starts 🎙️ Peek into FaFa’s dubbing session. 🤩#VETTAIYAN 🕶️ @rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran #FahadhFaasil @RanaDaggubati @ManjuWarrier4 @ritika_offl @officialdushara @srkathiir @philoedit… pic.twitter.com/hWaztLTJuj
— Lyca Productions (@LycaProductions) July 7, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com