'வேட்டையன்' ரன்னிங் டைம் இவ்வளவா? என்ன சர்டிபிகேட்?

  • IndiaGlitz, [Saturday,September 28 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதுடன், இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு உள்ளதால், வசூல் சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வேட்டையன் படத்தின் சென்சார் பணிகள் நேற்று முடிவடைந்ததாகவும், இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் அளித்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு மட்டும் அல்லாமல், இந்த படத்தின் ரன்னிங் டைம் 167 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 47 நிமிடங்கள் எனவும் கூறப்படுகிறது. தயாரிப்பு தரப்பில் இருந்து இன்று அல்லது நாளை இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

பொதுவாக மூன்று மணி நேரம் ஓடக்கூடிய படம் என்றால், ரசிகர்களுக்கு மிகைப்படுத்துதலாக இருக்கும் என்பதால் சமீப காலமாக மூன்று மணி நேரத்துக்கும் குறைவான படங்கள்தான் வெளியாகி வருகிறது, மேலும் குறைவான ரன்னிங் டைம் உள்ள படங்கள்தான் வெற்றியும் பெற்று வருகின்றன. இதற்கேற்ப, வேட்டையன் படம் 3 மணி நேரத்திற்கு 13 நிமிடங்கள் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

ரஜினியின் 'வேட்டையன்' படத்துடன் மோதுகிறதா இந்த படம்? விரைவில் அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அதே தேதியில் இன்னொரு திரைப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும்,

'ஜெயிச்சிருச்சு மாறா': சமீபத்தில் வெளியான படத்தை பாராட்டி தமிழில் ட்விட் போட்ட ஹர்பஜன் சிங்

'கிரிக்கெட் மீது நீங்க வச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா' என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழில் தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் பதிவு செய்ததை அடுத்து அந்த ட்வீட் தற்போது இணையத்தில்

முருகனுக்கு ஹோமம் செய்வது எப்படி.? பலன்கள் : ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் ஆன்மீக பேச்சாளர் விஜய்குமார் அவர்கள் அளித்த பேட்டி, ஹோமம் பற்றிய முழுமையான புரிதலை வழங்குகிறது.

ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் சசிகுமார் - சிம்ரன்.. ஜோடியாக நடிக்கிறார்களா?

ஒரே படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடிக்கும் நிலையில், இந்த படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திரைப்படங்களில் கேப்டன் பாடல், போஸ்டர்களை பயன்படுத்தினால்? பிரேமலதா விஜயகாந்த் முக்கிய அறிவிப்பு..!

சமீபத்தில் வெளியான "லப்பர் பந்து" உள்ளிட்ட சில படங்களில் விஜயகாந்த் படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.