இன்று மாலை 'வேட்டையன்' இசை வெளியீடு.. அதற்குள் வெளியான செகண்ட் சிங்கிள் 'Hunter Vantaar'..

  • IndiaGlitz, [Friday,September 20 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல், ‘Hunter Vantaar’ என்ற பாடல், சற்றுமுன் வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் முதல் பாடல் 'மனசிலாயோ' சமீபத்தில் வெளியாகி, இரண்டு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்ற நிலையில், சற்று முன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை சித்தார்த் பஸ்ரூர் பாடியிருக்க தெருக்குரல் அறிவு எழுதியுள்ளார்.

இந்த பாடல் 'இன்னொரு ’ஹூக்கும்’ பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த படத்தின் மற்ற பாடல்கள் இசை வெளியீட்டு விழாவின் போது வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகிணி, ரமேஷ் திலக், ரக்சன், ஜிஎம் சுந்தர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ’வேட்டையன்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா? திருப்பதி லட்டு சர்ச்சையில் பொங்கி எழுந்த தமிழ் இயக்குனர்..!

திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், "இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 8: 15 போட்டியாளர்கள் பட்டியல் லீக்? இதோ முழு விவரங்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிவடைந்த நிலையில், வரும் அக்டோபர் மாதம் எட்டாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

ஒரே ஒரு கேள்வி தான்: செய்தியாளர் மீது டென்ஷனான ரஜினிகாந்த்.. என்ன நடந்தது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் செய்தியாளர் கேட்ட ஒரே ஒரு கேள்வியால் அவர் டென்ஷனான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த இரண்டு படங்கள் போல் இருக்கும்: தனுஷின் 'இட்லி கடை' குறித்து தயாரிப்பாளர்..!

தனுஷ் நடிக்க இருக்கும் "இட்லி கடை" என்ற படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. இதோடு, நேற்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் வைரல் ஆனது.

விரைவில் சந்திப்போம்!! வாகை சூடுவோம்!! தவெக முதல் மாநாடு தேதியை அறிவித்த விஜய்..!

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சியின் முதல் மாநாடு நடைபெறும் புதிய தேதியை