நான் உங்க டிபார்ட்மெண்டுக்கு வேலை செய்யல.. உங்களுக்கு தான்.. 'வேட்டையன்' டெலிட் சீன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நான் உங்க டிபார்ட்மெண்டுக்கு வேலை செய்யவில்லை, உங்களுக்கு தான் வேலை செய்கிறேன் என்று பகத் பாசில் பேசும் வசனமும், அதன் பின் ரஜினியின் ரியாக்ஷனும் உள்ள டெலிட் சீன் காட்சிகள் சற்றுமுன் லைக்கா நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், திடீரென பெய்த கனமழை காரணமாக நேற்றும் இன்றும் திரையரங்குகளில் வசூல் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், "வேட்டையன்" படத்தின் டெலிட் சீன் காட்சியை லைக்கா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த காட்சியில் பகத் பாசில், ரஜினியிடம் "நீங்கள் கேட்டது இதுதான்" என்று கூற, அதற்கு ரஜினி, ‘சூப்பர்ரா’ என்று கூறிவிட்டு அதன் பின்னர் "இனிமேல் நீ என்கிட்ட வேலை செய்ய வேண்டாம். உனக்கு சேஃப்டி கிடையாது. நான் வேலூர் எஸ்பியிடம் சொல்லி இருக்கேன். கொஞ்ச நாள் அவர்கிட்ட வேலை செய்" என்று சொல்கிறார்.
அதற்கு, பகத் பாசில், "சார், நான் உங்க டிபார்ட்மெண்டுக்கு வேலை செய்யல. உங்களுக்கு தான். நீங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள்" என்றால், நான் முன்ன மாதிரியே எங்கேயாவது போய் திருடி வாழ்ந்திடுவேன்" என்று சொல்கிறார்.
அதன் பிறகு, பகத் பாசிலை கூர்ந்து பார்க்கும் ரஜினி, ’பேட்டரிக் சார், நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க" என்று சொல்கிறார். அதற்கு, பகத் பாசில் "உங்களை விடவா!" என கூறிவிட்டு ஓட, அவரை ரஜினி விரட்டுவதுடன் இந்த டெலிட் சீன் முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
A dose of humour from the hunter! 🤩 Enjoy this deleted scene between Athiyan and Patrick, a lighter side of VETTAIYAN 🕶️ you dint see on screen! ✨ #VettaiyanRunningSuccessfully 🕶️ in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial… pic.twitter.com/DbGvpSte47
— Lyca Productions (@LycaProductions) October 15, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments