நான் உங்க டிபார்ட்மெண்டுக்கு வேலை செய்யல.. உங்களுக்கு தான்..  'வேட்டையன்' டெலிட் சீன்..!

  • IndiaGlitz, [Tuesday,October 15 2024]

நான் உங்க டிபார்ட்மெண்டுக்கு வேலை செய்யவில்லை, உங்களுக்கு தான் வேலை செய்கிறேன் என்று பகத் பாசில் பேசும் வசனமும், அதன் பின் ரஜினியின் ரியாக்ஷனும் உள்ள டெலிட் சீன் காட்சிகள் சற்றுமுன் லைக்கா நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், திடீரென பெய்த கனமழை காரணமாக நேற்றும் இன்றும் திரையரங்குகளில் வசூல் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், வேட்டையன் படத்தின் டெலிட் சீன் காட்சியை லைக்கா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த காட்சியில் பகத் பாசில், ரஜினியிடம் நீங்கள் கேட்டது இதுதான் என்று கூற, அதற்கு ரஜினி, ‘சூப்பர்ரா’ என்று கூறிவிட்டு அதன் பின்னர் இனிமேல் நீ என்கிட்ட வேலை செய்ய வேண்டாம். உனக்கு சேஃப்டி கிடையாது. நான் வேலூர் எஸ்பியிடம் சொல்லி இருக்கேன். கொஞ்ச நாள் அவர்கிட்ட வேலை செய் என்று சொல்கிறார்.

அதற்கு, பகத் பாசில், சார், நான் உங்க டிபார்ட்மெண்டுக்கு வேலை செய்யல. உங்களுக்கு தான். நீங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள் என்றால், நான் முன்ன மாதிரியே எங்கேயாவது போய் திருடி வாழ்ந்திடுவேன் என்று சொல்கிறார்.

அதன் பிறகு, பகத் பாசிலை கூர்ந்து பார்க்கும் ரஜினி, ’பேட்டரிக் சார், நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க என்று சொல்கிறார். அதற்கு, பகத் பாசில் உங்களை விடவா! என கூறிவிட்டு ஓட, அவரை ரஜினி விரட்டுவதுடன் இந்த டெலிட் சீன் முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

தாய்க்குலங்களை மதிக்கிறேன்னு சொல்லாதீங்க.. ஜாக்குலின் ஆவேசம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று எட்டாவது நாளாக ஒளிபரப்பப்பட உள்ளது. ஒவ்வொரு நாளின் புரோமோ வீடியோக்களும் அன்றைய எபிசோடுக்கு எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.

சென்னைக்கு ஆபத்தா? 2025 சனிப்பெயர்ச்சி மற்றும் இயற்கை பேரழிவுகள் குறித்து ஜோதிடர் ஷெல்வி எச்சரிக்கை!

பிரபல ஜோதிடர் ஷெல்வி அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், வருகிற 2025-ம் ஆண்டு சனிப்பெயர்ச்சியால்

பிளான் ஏ, பிளான் பி இப்படி சொதப்பிட்டிங்களே.. ஆண்கள் அணியை வச்சு செய்த தர்ஷா..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் நாளிலிருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்த சீசனில் ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என பிரிக்கப்பட்டது,

5வது முறையாக இணைகிறார்களா அஜித்-சிறுத்தை சிவா? தயாரிப்பாளர், இசையமைப்பாளர் யார்?

அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ஏற்கனவே ' வீரம் ', ' வேதாளம் ', ' விவேகம் ' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய நான்கு படங்கள் வெளியாகி, எல்லாம் சூப்பர் ஹிட்

கமல்ஹாசனின் புதிய லுக், புதிய பயணம்.. ஸ்ருதிஹாசனின் கமெண்ட்..!

உலக நாயகன் கமல்ஹாசனின் புதிய லுக் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த புகைப்படம் குறித்து அவரது மகள் ஸ்ருதிஹாசன் பதிவு செய்த கமெண்ட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.