யாருக்கு ஓட்டு போட வேண்டும்? 'வேட்டையன்' இயக்குனர் ஞானவேல் பதிவால் ரஜினி அதிருப்தியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’ என்ற படத்தை இயக்கி வரும் இயக்குனர் ஞானவேல் சற்று முன் தனது சமூக வலைதளத்தில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று செய்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் பாஜக ஆதரவாளர் என்பதும், அவர் பாஜகவுக்கு தான் தன்னுடைய வாக்கை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை இயக்கி வரும் இயக்குனர் ஞானவேல் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்குமாறு தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
வருங்கால தலைமுறையினருக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்துவத்தை மதிக்கிற பாதுகாப்பான சூழலை அமைத்து தருவது நமது தார்மீக கடமை. இந்தியா கூட்டணி கட்சிகளின் வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தையும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை அளிக்கின்றன.
மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம். அதன் அடிப்படையில் தி.மு.க, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நானறிந்த, என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
‘வேட்டையன்’ இயக்குனர் ஞானவேலின் இந்த பதிவை பார்த்து ரஜினி அதிருப்தி அடைவாரா? அல்லது சினிமா வேறு, அரசியல் வேறு என்று சகஜமாக எடுத்துக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை. pic.twitter.com/XlJHMZOqiI
— Gnanavel (@tjgnan) April 17, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments