ரஜினி படத்திற்கு லாஜிக் பார்க்க முடியாது.. ரஜினி ஹெலிகாப்டரில் வரும் காட்சி குறித்து ஞானவேல்..!

  • IndiaGlitz, [Saturday,October 12 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் பெரும்பாலும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்தது. ஆனால் அதே நேரத்தில் பிரபல ஊடகங்கள் கூட ஒரு சில காட்சிகளை லாஜிக் இல்லாமல் எடுத்திருப்பதாக விமர்சனம் செய்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு தற்போது இயக்குனர் ஞானவேல் விளக்கம் அளித்துள்ளார்.

குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் ஹெலிகாப்டரில் ராணா தப்பிக்க முயற்சிக்கும் போது இன்னொரு ஹெலிகாப்டரில் ரஜினி அதே இடத்தில் வந்து இறங்கி ராணாவை கைது செய்யும் காட்சி குறித்து கூறும் விமர்சகர்கள் ஒரு சில நிமிடங்களில் எப்படி ரஜினி ஹெலிகாப்டரில் வந்து பிடிப்பார்? இது லாஜிக் மீறல் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் கூறிய ஞானவேல், ரஜினிகாந்த் அவர்கள் படத்தில் லாஜிக் பார்க்க வேண்டிய அவசியமில்லை. மேலும் ரஜினி கிளம்பும் இடத்திற்கும் ராணா தப்பிக்கும் இடத்திற்கும் இடையே இரண்டு மணி நேரம் பயண தூரம் இருக்கும், அதை நான் கண்டன்ட்டில் லாஜிக்காக காட்டியுள்ளேன்.

ஒரு பேரழிவு ஏற்பட்டால் உடனே ஹெலிகாப்டரில் வந்து மீட்பு படையினர் இறங்குவார்கள், இது கவர்மெண்ட் சிஸ்டம், ஒரு அவசர தேவை என்றால் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவது என்பது லாஜிக் தான் என்று விளக்கம் அளித்துள்ளார்.

அது மட்டும் இன்றி ரஜினி படத்திற்கு நான் காட்சிகளில் லாஜிக் பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இந்த விளக்கம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

368 எபிசோடுகளுடன் முடிந்த 'மீனா' சீரியல்.. சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் என்ன?

சன் டிவியில் காலை திங்கள் முதல் சனி வரை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'மீனா' தொடர் 368 எபிசோடுகளுடன் நேற்றுடன் முடிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

காதல்ல பட்டைய கிளப்புனும்.. பிக்பாஸ் லாஸ்லியாவின் 'மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்' டீசர்..!

பிக் பாஸ் லாஸ்லியா நடித்த மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங்' என்ற திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் 'கோட்' திரைப்படம்.. கண்டு ரசிக்கும் குடும்ப ஆடியன்ஸ்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி ரூ.450 கோடிக்கு மேல் திரையரங்குகளில் வசூல் ஆனது என்பது தெரிந்தது. திரையரங்கில் மாபெரும் வெற்றி பெற்ற

ஆயுத பூஜை ஸ்பெஷல்: நயன்தாராவின் ரொமான்ஸ் புகைப்படங்கள் வைரல்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனது கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்ஸ் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

'ஜெயிலர்', 'கோட்' பட முதல் நாள் வசூலை முந்தியதா 'வேட்டையன்' ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில், இந்த படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.