லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு அவமானம்.. சொன்ன நடிகை யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை நயன்தாராவை அவரது ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர் என்பதும் அவர் நடித்து வரும் திரைப்படங்களில் கூட லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தான் டைட்டில் வெளியாகி வருகிறது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் பிரபல நடிகை ஒருவர் தனக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அவமானமாக இருக்கிறது என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் ’அசுரன்’ என்ற திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமாகி அதன் பின்னர் ’விடுதலை 2’ ‘வேட்டையன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மஞ்சு வாரியர் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த போது லேடி சூப்பர் ஸ்டார் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அதில், ‘என்னை ஒரு சிலர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது தேவையில்லாத விவாதங்களை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி வருகிறது. இது எனக்கு தனிப்பட்ட முறையில் அவமானமாக உள்ளது.
இந்த பட்டத்திற்கு என சில வரைமுறைகளை வைத்திருக்கும் நிலையில் உண்மையில் எனக்கு எந்த பட்டமும் வேண்டாம், ரசிகர்களின் அன்பு ஒன்றே போதும்’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout