லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு அவமானம்.. சொன்ன நடிகை யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,August 05 2024]

நடிகை நயன்தாராவை அவரது ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர் என்பதும் அவர் நடித்து வரும் திரைப்படங்களில் கூட லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தான் டைட்டில் வெளியாகி வருகிறது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் பிரபல நடிகை ஒருவர் தனக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அவமானமாக இருக்கிறது என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் தமிழில் ’அசுரன்’ என்ற திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமாகி அதன் பின்னர் ’விடுதலை 2’ ‘வேட்டையன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மஞ்சு வாரியர் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த போது லேடி சூப்பர் ஸ்டார் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அதில், ‘என்னை ஒரு சிலர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது தேவையில்லாத விவாதங்களை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தி வருகிறது. இது எனக்கு தனிப்பட்ட முறையில் அவமானமாக உள்ளது.

இந்த பட்டத்திற்கு என சில வரைமுறைகளை வைத்திருக்கும் நிலையில் உண்மையில் எனக்கு எந்த பட்டமும் வேண்டாம், ரசிகர்களின் அன்பு ஒன்றே போதும்’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

More News

அனிதா குப்புசாமியின் எங்க வீட்டு பூஜை அறை🙏 Tour

பிரபல நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி அவர்கள், தனது வீட்டில் அமைத்துள்ள பூஜை அறையை ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்கு காண்பித்துள்ளார்.

'அது நான் இல்லை' 'பிரச்சனை தீர்ந்துவிட்டது'.. விஜய் ஆண்டனியின் 2 அறிக்கைகள்..!

விஜய் ஆண்டனி நடித்த 'மழை படிக்காத மனிதன்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் இந்த படம் குறித்து 'அது நான் இல்லை'

'அவசரப்பட்டு சொல்லிட்டேனே'.. வெங்கட்பிரபுவிடம் வருத்தப்பட்டாரா விஜய்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான 'கோட்' படத்தை முழுமையாக பார்த்த தளபதி விஜய் 'அவசரப்பட்டு சொல்லிட்டேனே' என்று அவரிடம் வருத்தப்பட்டதாக செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.

கார்த்தியின் 'சர்தார் 2' படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோயின்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கார்த்தி நடித்து வரும் 'சர்தார் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க

எனது அடுத்த படம் முற்றிலும் வேறுபட்டது.. சூரியின் எமோஷனல் பதிவு..!

தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக பதவி உயர்ந்துள்ள சூரி தற்போது பிஸியான நடிகராக இருந்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த 'விடுதலை', 'கருடன்'