'பார்க்கிங்' பட பாணியில் பிரச்சனை.. 'வேட்டையன்' பட நடிகரின் மகன் கடத்தல்.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ பட பாணியில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் ‘வேட்டையன்’ பட நடிகரின் மகனை கடத்தி சென்று சரமாரியாக தாக்கி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
’திருமதி செல்வம் ’உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள நடிகர் பிர்லா போஸ் என்பவர் தற்போது ‘வேட்டையன்’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். சென்னையில் உள்ள அப்பார்ட்மெண்ட்டில் தனது குடும்பத்துடன் இவர் குடியிருக்கும் நிலையில் சமீபத்தில் தனது கீழ் வீட்டில் உள்ள ஒரு பையன் தனது காரை இடித்து விட்டதாக சத்தம் போட்டு இருக்கிறார்.
ஆனால் அந்த பையன் திரும்ப அவரை மரியாதை இல்லாமல் பேசியதை அடுத்து இரு குடும்பத்துக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பிர்லா போஸ் ‘வேட்டையன்’ படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்ற நேரத்தில் அவருடைய பையனை கீழ்வீட்டு உள்ள பையன் கடத்திச் சென்று பத்து பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கி உள்ளதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிர்லா போஸ் உடனடியாக வீட்டிற்கு வந்து மகனை மருத்துவரிடம் காட்டிய போது ’இது மாணவர்கள் அடித்த மாதிரி தெரியவில்லை, காயம் இல்லாமல் ட்ரைனிங் எடுத்து உள் காயம் ஏற்படும் வகையில் அடித்துள்ளதாக மருத்துவர்கள் கூற அதனை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் தனது மகனை அனுமதித்து சிகிச்சை ஏற்பாடு செய்திருக்கிறார்.
இது குறித்து பிர்லா போஸ் காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக தெரிகிறது. ஏற்கனவே கீழ் வீட்டு பையன் மீது ஒரு புகார் இருந்ததாகவும் தற்போது இன்னொரு புகாரை அடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
’பார்க்கிங்’ பட பாணியில் ஒரு காரை இடித்த சின்ன பிரச்சனையில் பள்ளி மாணவனை கடத்தி தாக்கும் அளவுக்கு பிரச்சனை பெரிதாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout