close
Choose your channels

நம்பிக்கையை இழக்க வேண்டாம்.. காவ்யா மாறனுக்கு ஆறுதல் கூறிய 'வேட்டையன் 'நடிகர்..!

Monday, May 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய நிலையில் ஐதராபாத் அணி எதிர்பாராமல் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் போட்டி முடிந்தவுடன் தனது அணி தோல்வி அடைந்தாலும் கொல்கத்தா அணிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் எழுந்து நின்று கை தட்டினார்.

ஒரு கட்டத்தில் அவருக்கு கண்ணீரை அடக்க முடியாத நிலை ஏற்பட்ட போது அவர் திரும்பி நின்று அழுதார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தனது சமூக வலைத்தளத்தில் காவ்யா மாறனுக்கு ஆறுதல் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்ததாகவும் மைதானத்தில் தோல்விக்கு பிறகு அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுகையை பார்த்து மனம் வருத்தம் அடைந்ததாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக கேமராக்களில் இருந்து முகத்தை திருப்பி அவர் தனது கண்ணீரை மறைத்தார், அவருக்காக நான் வருத்தப்படுகிறேன், ஆனால் அதே நேரத்தில் ’நாளை இருக்கிறது என்ற நம்பிக்கையை இழக்க வேண்டாம்’ என்றும் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

நடிகர் அமிதாபச்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ’வேட்டையன்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment