வெற்றிமாறனின் அடுத்த படத்தில் 'ஜீனியஸ்' ஹீரோ!

  • IndiaGlitz, [Friday,June 28 2019]

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து வரும் 'அசுரன்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனத்தின் மூலம் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'ஜீனியஸ்' படத்தில் நடித்த ரோஷன் நாயகனாக நடிக்கவுள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் மூலம் கார்த்திக் என்ற இயக்குனர் அறிமுகமாகவுள்ளார்.

இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து கொண்டிருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் இரண்டு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் வரும் அக்டோபரில் இந்த படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.