ரஜினி, அஜித், விஜய், சூர்யா.... 'அசுரன்' வெற்றிக்கு பின் பிசியாகும் வெற்றிமாறன்

  • IndiaGlitz, [Thursday,November 14 2019]

தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தின் அபார வெற்றி இயக்குனர் வெற்றிமாறனை திரையுலகின் உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. இந்த படம் குறித்து தன்னிடம் இரண்டு மணி நேரம் ஷாருக்கான் பேசியதாகவும், இந்த படத்தில் உள்ள பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விஷயங்கள் குறித்து அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்ததாகவும் இயக்குனர் வெற்றி மாறன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் ‘அசுரன்’ இந்தி ரீமேக் குறித்து எதுவும் பேசவில்லை என்றும், இந்த சந்திப்பு முழுக்க முழுக்க தனிப்பட்ட முறையிலான சந்திப்பு என்றும் கூறியுள்ளார்.

மேலும் ரஜினி, விஜய் இருவரையும் சந்தித்துக் கதைகள் சொல்லியிருப்பதாகவும், சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித்தைத் தொடர்பு கொள்வதற்கும் முயற்சி செய்ததாகவும், அவர்களுக்குச் சரியான நேரம் வரும்போது கூப்பிடுவார்கள் என நினைப்பதாகவும் கூறிய வெற்றிமாறன் நேரம் வரும்போது நிச்சயம் அஜித்துடன் படம் பண்ணுவோம்’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

மேலும் சூரி ஹீரோவாக நடிக்கும் படம், நெட்பிளிக்ஸூக்காக ஒரு படம், சூர்யாவுடன் ஒரு படம் என திட்டமிட்டுள்ளதாக கூறிய வெற்றிமாறன், ‘வடசென்னை 2’ இப்போதைக்கு இல்லை என்றும், அதற்கான பட்ஜெட் அதிகம் என்பதால் தள்ளி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.