வெற்றிமாறன் கதை.. கௌதம் மேனன் இயக்குனர்.. ஹீரோ யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,December 11 2024]

வெற்றிமாறன் கதையை கௌதம் மேனன் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தில் ஒரு மாஸ் நடிகர் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களான வெற்றிமாறன் மற்றும் கௌதம் மேனன் இருந்து வரும் நிலையில், வெற்றிமாறனின் கதையை கௌதம் மேனன் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தில் நாயகனாக ஜெயம் ரவி நடித்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை வெல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதால், விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

வெற்றிமாறன் கதையை கேட்டதும், அந்த கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் தனக்கு ஏற்பட்டதாகவும், இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ஜெயம் ரவி சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள ’காதலிக்க நேரமில்லை’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் வேல்ஸ் பிலிம்ஸ், இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ’ஜென்னி’ படத்திலும் நடித்து முடித்துள்ள நிலையில், அதே தயாரிப்பு நிறுவனத்திற்காக இன்னொரு படத்தில் அவர் நடிக்க உள்ளார் என்பதும் அதுதான் கௌதம் மேனன் படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் அறிவிப்புக்கு முன்னரே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.