வெற்றிமாறனின் 'விடுதலை' டிரைலர் எப்போது? கசிந்த தகவல்..!

  • IndiaGlitz, [Thursday,February 23 2023]

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாகத்தின் டிரைலர் எப்போது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.

சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடித்து வரும் ‘விடுதலை’ என்ற திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது என்பது முதல் பாகம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. இந்த படத்தின் ரிலீஸ்க்கு முன்பே டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமை வியாபாரம் முடிந்து விட்டது என்றும் மேலும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் ‘விடுதலை’ படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் புரமோஷன் பணியை தொடக்க பட குழுவினர் முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் 8ஆம் தேதி ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும் ‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்தை மார்ச் 31ஆம் தேதி ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வரும் என்றும் கூறப்படுகிறது.

சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன் உள்பட பல்ரது நடிப்பில் உருவான இந்த படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவான இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'என்ன குமுதா டிரஸ்ஸிங் சென்ஸ் மாறிகிட்டே வருது.. ஷிவாங்கியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமான ஷிவாங்கியின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன. 

நீ இல்லாமல் இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை: திருமண நாளில் நெகிழ்ச்சி பதிவு செய்த இயக்குனர்..!

தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தனது 21வது திருமண நாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் தனது மனைவி குறித்து நெகிழ்ச்சியான பதிவை சமூக வலைதளத்தில் பதிவு

உயிருக்கு போராடும் குழந்தையை காப்பாற்ற இத்தனை கோடியா? உதவி செய்த முகம் தெரியாத நபர் யார்?

முதுகு தண்டுவட தசை செயலிழப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் குழந்தை ஒன்றுக்கு முகம் தெரியாத நபர் ஒருவர் 11 கோடி கொடுத்து உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஒரு பொண்ணு நம்மள முழுசா நம்பற வரைக்கும் அவ கண்ணை மட்டும் தான் பாத்து பேசணும்: ‘அரியவன்’ டிரைலர்

ஒரு பொண்ணு நம்மள முழுசா நம்பற வரைக்கும் அவ கண்ணை மட்டும் தான் பாத்து பேசணும்: ‘அரியவன்’ டிரைலர்

'மார்க் ஆண்டனி விபத்து குறித்து விஷால், எஸ்ஜே சூர்யா கூறிய அதிர்ச்சி தகவல்..!

'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று நடந்த நிலையில் எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தால் யாருக்கும் காயம்