வெற்றிமாறனின் 'விடுதலை' ரிலீஸ் தேதி இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்த ‘விடுதலை’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த ட்ரெய்லரை பார்த்த பிறகு இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் முதல் பாகம் இந்த மாதமே வெளியாகும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம் மார்ச் 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது
இதனை அடுத்து இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் இரண்டு ஸ்டில்கள் வெளியாகி உள்ள நிலையில் அட்டகாசமான இந்த ஸ்டில்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.
The Freedom struggle is about get underway!
— RS Infotainment (@rsinfotainment) March 20, 2023
Director #VetriMaaran 's #ViduthalaiPart1 worldwide release on March 31st.#ViduthalaiPart1FromMarch31 @ilaiyaraaja Musical@VijaySethuOffl @sooriofficial @elredkumar @rsinfotainment @BhavaniSre @VelrajR @DirRajivMenon pic.twitter.com/esn6VRUNHc
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com