'விடுதலை' படத்தின் மொத்த ரன்னிங் டைம் 8 மணி நேரம்.. ஓடிடியில் ரிலீசா?
- IndiaGlitz, [Saturday,December 21 2024]
’விடுதலை’ முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் ஆகிய இரண்டையும் சேர்த்து 8 மணி நேர படம் என்னிடம் இருக்கிறது என்றும், ஓடிடியில் அதை ரிலீஸ் செய்வோம் என்றும் வெற்றிமாறன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
’விடுதலை’ படத்தின் முதல் பாகம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்பதும், இரண்டாம் பாகம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ரன்னிங் டைம் என்பதும் தெரிந்தது. இதில் கூட, கடைசி நேரத்தில் 8 நிமிட காட்சியை வெற்றிமாறன் ட்ரிம் செய்திருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ’விடுதலை’ முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் ஆகிய இரண்டையும் சேர்த்து தன்னிடம் எட்டு மணி நேரம் காட்சிகளாக உள்ளது என்றும், அதனால் நான்கு பாகங்களாக கூட எடுத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். இது ஒரு பெஸ்ட்டிவ் திரைப்படம் என்பதால் சில காட்சிகளை கட் செய்ய வேண்டியிருந்தது என்றும், ஆனால் அந்த காட்சிகள் எல்லாம் அப்படியே இருக்கிறது, அதை தனியாக எடிட் செய்து ஓடிடியில் ஒளிபரப்ப திட்டமிட்டு இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
எனவே, ’விடுதலை’ முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் மற்றும் இதுவரை வெளியாகாத காட்சிகளையும் சேர்த்து ஒடிடியில் பார்க்கலாம் என்பது ஆச்சரியத்தக்க தகவலாக உள்ளது. அதுமட்டுமின்றி, கடைசி நேரத்தில் ’விடுதலை 2’ படத்தில் சில எடிட்டிங் செய்யப்பட்டதாகவும், அதனால் இந்தியாவில் ரிலீசான ’விடுதலை 2’ படத்திற்கும் அமெரிக்காவில் ரிலீசான ’விடுதலை 2’ படத்திற்கும் சில மாற்றங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.