அமைச்சர் உதயநிதிக்கு எனது முழு ஆதரவு.. அனைவரும் அவருடன் நிற்க வேண்டும்: வெற்றிமாறன்
- IndiaGlitz, [Thursday,September 07 2023]
தமிழக அமைச்சர் உதயநிதி சமீபத்தில் சனாதனம் குறித்து பேசியது சர்ச்சைக்கு உள்ளான நிலையில் திரையுலகினர் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
அந்த வகையில் அமைச்சர் உதயநிதிக்கு எனது முழு ஆதரவு என பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
“பிறக்கின்ற எல்லோருக்கும் எல்லாமும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை, அது பிறப்புரிமை என்று கூறிய வெற்றிமாறன், அதை மறுக்கிற எதுவாக இருந்தாலும், எந்த ரூபத்தில் இருந்தாலும், அதை எதிர்ப்பதும் ஒதுக்குவதும் வீழ்த்துவதும் சுதந்திர மனிதர்களாகிய, விடுதலை விரும்பும் மனிதர்களாகிய நம்முடைய கடமை என்று வெற்றிமாறன் தெரிவித்தார்.
அதை பேசி இருக்கக்கூடிய அமைச்சர் உதயநிதியுடன் நாம் அனைவரும் நிற்க வேண்டும், நானும் அவருடன் இருக்கிறேன், நானும் அவருக்கு ஆதரவு தருகிறேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவதற்கு குறித்த கேள்விக்கு பதில் அளித்த வெற்றிமாறன், ‘இந்தியா என்ற பெயரே போதும், அதுவே சரியானதாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.
#JUSTIN அமைச்சர் உதயநிதிக்கு இயக்குநர் வெற்றிமாறன் ஆதரவு #UdhayanithiStalin #VetriMaaran #SanathanaDharma #news18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/ahFkVMd1qG
— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 6, 2023