'ஜல்லிக்கட்டு' மட்டுமல்ல, இந்த பிரச்சனையும் இருக்கு: 'வாடிவாசல்' கதை குறித்து வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ என்ற திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ‘வாடிவாசல்’ படம் குறித்த சில தகவல்களை ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது வெற்றி மாறன் கூறியுள்ளார். குறிப்பாக ‘வாடிவாசல்’ திரை படத்தில் சூர்யாவுடன் இயக்குனர் அமீர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ‘வாடிவாசல்’ திரைப்படம் ஜல்லிக்கட்டு சம்பந்தமான கதையம்சம் என்று அனைவரும் நினைத்தாலும் இந்த படத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த அம்சங்களும் இருக்கும் என்றும் அவர் மறைமுகமாக தெரிவித்தார். இந்த படத்தின் கதை இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தபோது உள்ள கதை என்பதால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்த காட்சிகள் இந்த படத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ‘வாடிவாசல்’ ரொம்ப எளிமையான கதை என்றும், கொஞ்சம் நாவலை ஒட்டி இருந்தாலும், மனிதனுக்கும் விலங்குக்குமான தொடர்பைப் படமாக்குவது ரொம்பவே சவால் என்றும், காளை மாடுகள் புதுசா ஒருத்தரை உடனே நம்பாது என்றும், அதுகூட பழக ரொம்ப நாள் தேவைப்படுவதால் சூர்யா ஒரு காளை மாட்டை வளர்த்து, பழக ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும், ஆனால் அதுமட்டுமின்றி படத்திற்காக வேறு சில பணிகளையும் செய்திருக்கின்றோம் என்றும், அது நீங்கள் படம் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள் என்று கூறினார்.