புத்தக வெளியீட்டு விழாவில் வேதனையை வெளிப்படுத்திய வெற்றிமாறன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். எழுத்தாளர் ம.தொல்காப்பியன் என்பவர் எழுதிய ’சினிமா ஒரு காட்சி இலக்கியம்’ எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது:
25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் விமர்சனங்களை பார்த்து வருகிறேன். விமர்சனத்தில் தனிநபர்களின் விருப்பு வெறுப்பு மற்றும் அவர்களது அரசியல் சார்பின் அடிப்படையில் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. சினிமாவை ஒரு கலையாக பார்ப்பது குறித்த புத்தகங்கள் தமிழில் குறைவாகவே இருக்கிறது’ என்று வேதனையுடன் கூறினார். இந்த விழாவில் இயக்குனர் அமீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நடித்து வரும் ’விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் அவர் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார் என்பதும், அதனை அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் சினிமா குறித்த புத்தகங்கள் அதிகமில்லை... இயக்குனர் வெற்றிமாறன் வருத்தம் #Cinema | #Vetrimaran | #Books | #Chennai pic.twitter.com/ZyxuApJtma
— Polimer News (@polimernews) September 26, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments