நடிகர்களை தலைவர் என சொல்வது வருத்தமளிக்கிறது.. யாரை மறைமுகமாக சொல்கிறார் வெற்றிமாறன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர்களை தலைவர் என கூப்பிடுவது வருத்தம் அளிக்கிறது என இயக்குனர் வெற்றி மாறன் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இன்று நடைபெற்ற ’தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை’ என்னும் நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது பள்ளி கல்லூரிகளில் ஜாதி சான்றிதழை கேட்பது கட்டாயம் என்பதை நிறுத்த வேண்டும் என்றும் நான் என் குழந்தைகளுக்கு ஜாதி இல்லை என்ற சான்றிதழ் வாங்க முயன்றேன் என்றும் ஆனால் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள் என்றும் நீதிமன்றம் சென்றும் அப்படி சான்றிதழ் ஜாதி இல்லை என்ற சான்றிதழ் கொடுக்க முடியாது, நீங்கள் ஜாதியை குறிப்பிட்டே ஆக வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்கள் என்றும் தெரிவித்தார்.
பள்ளி கல்லூரிகளில் ஜாதி சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும், ஆனால் அதே நேரத்தில் அவர்களுக்கான உரிமையை அவர்கள் பெற்று ஆக வேண்டும். எனக்கு ஜாதி தேவையில்லை என்று நினைக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் மற்றொரு கேள்விக்கு அவர் பதில் கூறிய போது ’நடிகர்களை தலைவர் என்று சொல்வது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றும் நடிகர்கள் முன்பு அரசியலுடன் சம்பந்தப்பட்டவர்களாக இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு இருக்கும் நடிகர்களை தலைவர் என்று கூப்பிடுவது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள நடிகர்களில் உச்ச நட்சத்திரமான நடிகர் ஒருவரை மட்டுமே ரசிகர்கள் தலைவர் என்று அழைத்து வரும் நிலையில் அந்த நடிகரை தான் இயக்குனர் வெற்றிமாறன் மறைமுகமாக குறிப்பிடுகிறாரா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout