'விடுதலை' 2 பாகங்களும் சேர்த்து ரிலீஸ்.. வெற்றிமாறனின் மாஸ் பிளான்.. டிக்கெட்டுக்கள் முன்பதிவு..
Send us your feedback to audioarticles@vaarta.com
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்த 'விடுதலை’ திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் ஒரு சில மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென 'விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களும் சேர்த்து ஒரே படமாக வெளியிட வெற்றிமாறன் மாஸ் பிளான் செய்துள்ளதாகவும் இதற்கான டிக்கெட்டுகள் தற்போது முன்பதிவு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டம் நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் படங்கள் பங்கேற்று வரும் நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் திரைப்பட விழாவில் 'விடுதலை’ திரைப்படமும் பங்கேற்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்கும் 'விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களும் ஒன்றாக சேர்ந்து திரையிடப்பட இருப்பதாக தெரிகிறது. ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 3 ஆகிய தேதிகளில் 'விடுதலை’ படத்தின் 2 பாகங்களும் சேர்த்து திரையிட உள்ளதாகவும் இதற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் தற்போது விற்பனையாகி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
'விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் இதன் முக்கிய காட்சிகளை முதல் பாகத்துடன் சேர்த்து இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒரு முழுமையான திரைப்படத்தை நெதர்லாந்து திரைப்பட விழாவில் திரையிட வெற்றிமாறன் மாஸ் பிளான் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த திரைப்பட விழாவில் இந்த படத்தின் இரண்டு பாகங்களை ஒன்றாக பார்த்தவர்களின் விமர்சனங்கள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Viduthalai Part 1 & 2 will be screening at the "International Film Festival Rotterdam" on Jan 31st & Feb 3rd.
— Red Giant Movies (@RedGiantMovies_) January 29, 2024
Grab your seats now at https://t.co/IDwBqZyNbi
An @ilaiyaraaja Musical#VetriMaaran @VijaySethuOffl @sooriofficial @elredkumar @rsinfotainment @BhavaniSre… pic.twitter.com/qxUTVcfAlG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout