வெற்றிமாறனின் அடுத்த பட நாயகி அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,September 16 2018]

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'வடசென்னை' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் வெற்றிமாறன் தயாரிக்கும் ஒரு படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

ஜீவா, நயன்தாரா நடித்த 'திருநாள்' படத்தின் இயக்குனர் ராம்நாத் இயக்கும் இந்த படத்தில் மனிஷா யாதவ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். 'வழக்கு எண் 14/9' படத்தில் அறிமுகமாகிய மனிஷா யாதவ், சமீபத்தில் நடித்த 'ஒரு குப்பை கதை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கிராமத்து பெண் வேடத்தில் வித்தியாசமான தோற்றத்தில் மனிஷா யாதவ் நடிக்கவுள்ள இந்த படம் ஒரு த்ரில் படம் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் முதல் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பும், இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பும் மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

மனிஷா யாதவ் தற்போது 'சண்டமுனி' என்ற திகில் காமெடி படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தை மில்கா செல்வகுமார் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அடல்ட் காமெடி இயக்குனரின் அடுத்த பட டைட்டில் இதுதான்

'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' என்ற அடல்ட் காமெடி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் ஜிவி பிரகாஷூடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே

தனுஷின் 'வடசென்னை' ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு

தனுஷ் நடித்த 'வடசென்னை' திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறித்து பார்த்தோம். இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதியும் மிக விரைவில் அறிவிக்கப்படும்

மீண்டும் தப்பிய ஐஸ்வர்யா? இந்த வார பலிகடா யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஐஸ்வர்யாவை வெளியேற்ற கடந்த பல வாரங்களாக பொதுமக்கள் முயற்சி செய்து வந்தபோதிலும் பிக்பாஸ் அவரை இறுதி வரை கொண்டு செல்ல முடிவெடுத்துவிட்டதால்

முக்கிய வேடத்தில் யோகிபாபு: டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட்லுக் வெளியீடு

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் 'கூர்கா'. 'டார்லிங்' பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கும்

செக்க சிவந்த வானம் படத்தின் புதிய பாடலின் வைர வரிகள்

செக்க சிவந்த வானம்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ஏற்கனவே அனைத்து பாடல்களும் ஹிட்டாகியுள்ளது. மணிரத்னம்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில்