'விசாரணை' பாணியில் படமாகும் இன்னொரு நாவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விசாரணை' திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது என்பதையும் சர்வதேச அளவில் பல விருதுகளையும் பெற்றது என்பதையும் நாம் அறிவோம். சந்திரகுமார் எழுதிய 'லாக்கப்' என்ற நாவலின் அடிப்படையில் உருவான இந்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் மேலும் ஒரு நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பிரபல எழுத்தாளர் கோட்டா நீலிமா எழுதிய 'Shoes of the Dead' என்ற நாவலை திரைப்படமாக்கும் உரிமையை வெற்றிமாறன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. விவசாயி ஒருவர் தொடர்ச்சியாக ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதால் அவருடைய குடும்பத்திற்கு ஏற்படும் கஷ்டங்கள் குறித்த நாவல்தான் Shoes of the Dead'
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'வடசென்னை' படத்திற்கு பின்னர் அவர் இந்த படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் பல விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments