'விசாரணை' பாணியில் படமாகும் இன்னொரு நாவல்

  • IndiaGlitz, [Wednesday,March 16 2016]

சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விசாரணை' திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது என்பதையும் சர்வதேச அளவில் பல விருதுகளையும் பெற்றது என்பதையும் நாம் அறிவோம். சந்திரகுமார் எழுதிய 'லாக்கப்' என்ற நாவலின் அடிப்படையில் உருவான இந்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் மேலும் ஒரு நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


பிரபல எழுத்தாளர் கோட்டா நீலிமா எழுதிய 'Shoes of the Dead' என்ற நாவலை திரைப்படமாக்கும் உரிமையை வெற்றிமாறன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. விவசாயி ஒருவர் தொடர்ச்சியாக ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதால் அவருடைய குடும்பத்திற்கு ஏற்படும் கஷ்டங்கள் குறித்த நாவல்தான் Shoes of the Dead'

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'வடசென்னை' படத்திற்கு பின்னர் அவர் இந்த படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் பல விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மார்ச் 20-ல் விஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் வரும் 20ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது...

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படம் குறித்த முக்கிய தகவல்

பிரபல இசையமைப்பாளராகவும், வளர்ந்து வரும் கோலிவுட் நாயகனுமாகிய ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்துள்ள 'எனக்கு இன்னொரு பேர்...

இருமுகனில் ஒருமுகமாகும் கருணாகரன்

சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உளவுப்பிரிவு அதிகாரி மற்றும் திருநங்கை

தல அஜித்தின் 57வது படம் குறித்த முக்கிய தகவல்கள்

'தல அஜித் நடித்த 'வேதாளம் திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி ரூ.100 கோடி கிளப்பில் இணைந்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில்...

'கருடா''வுக்கு வில்லனாகும் 'ஆரம்பம்' நடிகர்

அரிமாநம்பி' ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை...