வெற்றிமாறனின் 'விசாரணை' ரிலீஸ் தேதி?

  • IndiaGlitz, [Saturday,December 12 2015]


பொல்லாதவன், ஆடுகளம் என்ற இரண்டே படங்களை இயக்கியிருந்தாலும் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். மேற்கண்ட இரண்டு படங்களும் தனுஷின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது மட்டுமின்றி ஆடுகளம் படம் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பல சர்வதேச திரைப்படங்களில் கலந்து கொண்டு பெரும் பாராட்டுக்களையும் விருதுகளை பெற்றது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

'விசாரணை' திரைப்படம் வரும் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த தேதி அதிகாரபூர்வமாக இயக்குனரால் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. தினேஷ், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ளனர்.,

More News

வெள்ள நிவாரத்திற்கு உதவும் ரஜினியின் 'சிவாஜி தி பாஸ்

சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இன்று தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை என சூப்பர்ஸ்டார் அறிவித்திருந்தாலும் அவரது ரசிகர்கள் ரஜினியின் பிறந்தநாளை ஆக்கபூர்வமாக வெள்ள நிவாரண பணி செய்து கொண்டாடி வருகின்றனர்....

பாபிசிம்ஹாவின் 'கோ 2' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்

பீட்சா, சூது கவ்வும், நேரம் ஆகிய படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்து வந்த நடிகர் பாபிசிம்ஹா, 'ஜிகர்தண்டா' என்ற ஒரே படத்தில் உச்சத்தை அடைந்தது மட்டுமின்றி தேசிய விருதும் பெற்றார்....

நடிகர்களிடம் கேட்பது யாசகம் அல்ல, நஷ்டஈடு!

கட் அவுட்டுக்கு பால் ஊத்துனவங்க தலையிலும் கைப்பிடியளவு கழிவு மண்ணை அள்ளி வச்சுட்டு போயிருச்சு வெள்ளம்! சினிமாவில் வரும் குறியீடுகளை பற்றி நிறைய அறிந்திருக்கும் ரசிகனுக்கு இந்த ‘மண்டையில மண்’ சமாச்சாரமும் ஒரு குறியீடுதான் என்பது தெரியாமலிருக்காது....

நயன்தாராவுடன் இணைந்த மணிரத்னம் நாயகி

'அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்-நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் இன்னொரு நாயகி கேரக்டருக்கு கடந்த சில வாரங்களாக முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது என்பது அனைவரும் அறிந்ததே.....

சென்னைக்கு ஏதாவதுன்னா உடனே ஓடி வந்துடுவோம். பாகுபாலி ராணா

சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நூற்றுக்கணக்கான உயிர்களும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் சேதம் அடைந்தது....