'விடுதலை' படத்தின் அதிர்ச்சியான சென்சார் தகவல்.. ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,March 23 2023]

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பாகம் மார்ச் 31-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ’விடுதலை’ படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ’ஏ’ சான்றிதழ் பெற்ற படம் என்பதால் 18 வயதுக்கு உட்பட்டோர் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகப்படியான வன்முறை காட்சிகள் காரணமாக தான் இந்த படத்திற்கு ’ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

ஏற்கனவே வெற்றிமாறனின் ’வடசென்னை’ படத்திற்கும் ’ஏ’ சான்றிதழ் தான் கிடைத்தது என்பது தெரிந்தது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.
 

More News

விஜய் தேவரகொண்டா - சமந்தாவின் 'குஷி' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சமந்தா நடித்த 'சாகுந்தலம்' என்ற திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  சமந்தாவின் அடுத்த திரைப்படமான 'குஷி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்று

நான் ஐஸ்வர்யாவின் பினாமி.. கைதான ஈஸ்வரி கூறிய திடுக் தகவல்..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடியதாக கைது செய்யப்பட்ட அவரது வீட்டின் பணிப்பெண் ஈஸ்வரி என்பவர், தான் ஐஸ்வர்யாவின் பினாமி என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மறுபடியும் பிராங்க்கா? 'குக் வித் கோமாளி' ஸ்ருதிகாவை கடுமையாக விமர்சனம் செய்த பிரபலம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் டைட்டில் வின்னரான ஸ்ருதிகாவை பிரபலம் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்யும் வீடியோ

விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' ரிலீஸ் தேதி தள்ளி போகிறதா?

 விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக

'பாபநாசம்' நடிகை ஆஷாவுக்கு திருமண வயதில் மகளா? வைரலாகும் புகைப்படங்கள்..!

 கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நடிகை ஆஷா சரத்தின் மகள் திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருவதை