வெற்றி மாறனின் மூன்றாம் பாக திரைப்படம்.. இதுக்கு எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

  • IndiaGlitz, [Sunday,August 25 2024]

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’விடுதலை’ திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான நிலையில் இந்த படம் வெளியான ஒரு சில மாதங்களில் ’விடுதலை 2’ படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் ஒன்றரை வருடங்கள் ஆன பின்னரும் இன்னும் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பே முடியவில்லை என்றும் இந்த ஆண்டு இறுதியில் இந்த ’விடுதலை 2’ வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’விடுதலை 2’ படத்தின் ரன்னிங் டைம் மொத்தம் 4 மணி நேரத்திற்கு அதிகமாக இருப்பதால் ’விடுதலை’ படத்தின் மூன்றாம் பாகத்தையும் வெளியிட வெற்றிமாறன் உள்பட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ’விடுதலை 2’ படம் வெளியான பின்னரே ’விடுதலை 3’ திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

’விடுதலை’ ரிலீசுக்கு பின்னர் இரண்டாம் பாகத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் எடுத்துக் கொண்ட இயக்குனர் வெற்றிமாறன், மூன்றாம் பாகத்துக்கு எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்வாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி இரண்டு வருடங்களாகியும் இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.