எதிர்பார்த்த அதே தேதி தான்.. 'விடுதலை 2' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,August 29 2024]

வெற்றி மாறனின் ’விடுதலை 2’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’விடுதலை 2’ திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் ’விடுதலை 2’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது டிசம்பர் 20ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில், இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’விடுதலை 2’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ், கெளதம் மேனன், ராஜீவ் மேனன், பாலாஜி சக்திவேல், இளவரசு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.வேல்ராஜ் ஒளிப்பதிவில் ராமர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

நீங்கள் எவ்வளவு பெரிய மோசடியாளர் என்பது உலகத்திற்கே தெரியும்.. யாரை சொல்கிறார் ஸ்ரீரெட்டி?

நீங்கள் எவ்வளவு பெரிய மோசடியாளர் என்பது இந்த உலகத்திற்கே தெரியும் என நடிகை ஸ்ரீ ரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாழை'யை சொல்லி கோழைகளாக்க வேண்டாம்.. மாரி செல்வராஜுக்கு பிரபல அரசியல் தலைவர் கோரிக்கை..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'வாழை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் குறித்து   புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது முகநூல் பக்கத்தில்

சென்னை டு மதுரை 2 மணி நேரம் தான்.. 234 கிமீ வேகத்தில் கார் ஓட்டிய தல அஜித்..!

நடிகர் அஜீத் 234 கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வேகத்தில் சென்றால் சென்னையில் இருந்து மதுரைக்கு

'கோட்' இரண்டாம் பாகம் உருவாகிறதா? கிளைமாக்ஸில் ட்விஸ்ட்..!

தளபதி விஜய் தற்போது 'கோட்' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அவர் 'தளபதி 69' படத்தை முடித்தவுடன் முழுமையாக அரசியலில் குதிக்க உள்ளார் என்றும்

செருப்பால் அடிக்க வேண்டும்.. நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து நடிகர் விஷால்..!

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என நடிகர் விஷால் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.