18 வயதிற்கு குறைவானவர்கள் பார்க்க முடியாது: 'விடுதலை 2' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,December 17 2024]

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை 2’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். எனவே திரையரங்கில் இந்த படத்தை 18 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்க முடியாது. மேலும், இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ’விடுதலை’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் வரும் இருபதாம் தேதி வெளியாக உள்ளது. இரண்டாம் பாகத்தில் மஞ்சு வாரியர் உள்பட சில முக்கிய நட்சத்திரங்கள் இணைத்துள்ள நிலையில், இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் அரசியல் மற்றும் கெட்ட வார்த்தை வசனங்களை நீக்கிவிட்டு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, அனுராக் காஷ்யப், கிஷோர், ராஜீவ் மேனன், கௌதம் மேனன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் ராமர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

மலையாள திரையுலகில் ஒரு புதுவரவு.. 'ருதிரம்' படத்தில் அசத்தலான நடிப்பு..!

மலையாளத் திரைப்படமான ருதிரத்தில் ஜேஸன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் கவர்ந்திழுக்கும் புதுவரவாக மாறியுள்ளார் பி கே பாபுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.. அதற்குள் 4 கேரக்டர்கள் மாற்றம்.. என்ன நடக்குது 'எதிர்நீச்சல் 2' சீரியலில்?

'எதிர்நீச்சல் 2' சீரியல் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இந்த சீரியலில் நான்கு கேரக்டர்களில் நடித்த நட்சத்திரங்கள் மாறி உள்ளதாக கூறப்படுகிறது.

'கோட்' படத்தை அடுத்து இன்னொரு படத்தில் AI மூலம் கேப்டன் விஜயகாந்த்.. இயக்குனர் தகவல்..!

சமீபத்தில் வெளியான விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் AI மூலம் சில நிமிடங்கள் தோன்றிய நிலையில், இன்னொரு திரைப்படத்திலும் AI மூலம் கேப்டன் விஜயகாந்த்

பாலிவுட் மாஸ் நடிகர் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

பாலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர் நடிக்கும் படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பணிபுரிய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி பெயரை மாற்றியவர்.. கலைஞர் வீட்டு கருவாட்டு வாசம்: நடிகர் செந்தாமரை மகள் பேட்டி..!

பிரபல குணச்சித்திர நடிகர் செந்தாமரையின் மகள் ராஜலட்சுமி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.