வெற்றிமாறனின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்!

வெற்றிமாறன் இயக்கி வரும் அடுத்த திரைப்படத்தில் பிரபல இயக்குனர் ராஜீவ் மேனன் இணைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு 90% முடிந்து விட்டதாகவும் தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

’விடுதலை’ இரண்டாம் பாகத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவில் மிகப்பெரிய ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும், பீட்டர் ஹெய்ன் இந்த ஸ்டண்ட் காட்சியை அமைத்து வருவதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ராஜீவ்மேனன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான ராஜீவ்மேனன் இந்த படத்தில் இணைந்து இருப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.