ரிலீசுக்கு 2 நாள் இருக்கும் போது வெற்றிமாறன் செய்த கரெக்சன் ..! என்ன மாற்றம் தெரியுமா?
- IndiaGlitz, [Wednesday,March 29 2023]
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ’விடுதலை’ படத்தின் முதல் பாகம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான அனைத்து பணிகளும் முடிந்து விட்டது என்பதும், சென்சார் பணிகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’விடுதலை’ திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தில் சில மாற்றங்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தில் டப்பிங்கில் அவர் சில கரெக்ஷன் செய்ததாக தெரிகிறது.
இயக்குனர் வெற்றிமாறன் தனது படத்தில் உள்ள அனைத்துமே பெர்ஃபெக்ட் ஆக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் என்பதும் அதன் காரணமாகத்தான் கடைசி நேரத்தில் கூட அவர் டப்பிங் கலைஞர்களை வரவழைத்து சில மாற்றங்களை செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன், பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.