close
Choose your channels

'தளபதி 65' குறித்த முக்கிய தகவல்:

Monday, December 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சென்னை, டெல்லி ஆகிய இடங்களில் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது கர்நாடக மாநிலத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது

இதனை அடுத்து தளபதி 65 படத்தின் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. தளபதி விஜய் எப்போதும் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடியும்முன்னரே அடுத்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை உறுதி செய்துவிடுவார் என்பது தெரிந்ததே

அந்த வகையில் தற்போது தளபதி விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’ படத்தை வெற்றிமாறன் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் ‘அசுரன்’ படத்தில் பணி செய்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ‘தளபதி 65’ படத்தில் பணியாற்ற இருப்பதாகவும் வெற்றிமாறன் தரப்பில் இருந்து கூறப்படுகிறது

ஆனால் வெற்றிமாறன் ஏற்கனவே நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாக கூறப்படுவதால் ’தளபதி 65’ படத்தை அவர் இயக்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னரே வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படம் சூர்யா படமா? அல்லது விஜய் படமா? என்பது தெரிய வரும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment