'விசாரணை' படத்தின் புதிய ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Saturday,January 09 2016]

தனுஷ், வெற்றிமாறன் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விசாரணை' திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ள நிலையில் இந்த படம் வரும் 29ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள லைகா நிறுவனம் 'விசாரணை' திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவித்துள்ளது. சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை 2', மற்றும் மாதவன் நடித்த 'இறுதிச்சுற்று' ஆகிய இரண்டு முக்கிய படங்கள் ஜனவரி 29-ல் ரிலீஸ் ஆவதால் 'விசாரணை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒருவாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரக்கனி, 'கயல்' ஆனந்தி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

More News

பொங்கலுக்கு பின்பும் தொடர்கிறது விஜய்யின் 'தெறி

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பொங்கலுக்கு முன்னர் முற்றிலும் முடிந்துவிடும் என்று செய்திகள் வெளியாகியது.

பசங்க 2' படத்திற்கு 10 வயதுக்குட்பட்ட பசங்களுக்கு இலவசம்

பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலாபால் சிறப்பு தோற்றத்தில் நடித்த கடந்த 'பசங்க 2' திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகி மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது....

பெங்களூர் நாட்கள் டீசர் வெளியாகும் தேதி-நேரம்

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'பெங்களூர் டேய்ஸ்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படத்திற்கு 'பெங்களூர் நாட்கள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை சரியாக 5.40 மணிக்கு இணையதளங்களில் வெளியாகவுள்ளது....

மர்ம மனிதனின் பாடல் கம்போஸிங்கை தொடங்கிய ஹாரீஸ் ஜெயராஜ்

சீயான் விக்ரம் தற்போது "ஸ்பிரிட் ஆப் சென்னை' என்ற வீடியோவை இயக்குவதில் ஒருபக்கம் பிசியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உதயநிதி ஸ்டாலினின் 'கெத்து' படத்தின் சென்சார் விபரங்கள்

உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்சன் நடித்துள்ள 'கெத்து' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் ரிலீஸாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கின்றது...