தனுஷின் 'வடசென்னை'யில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Wednesday,June 22 2016]

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவுள்ள 'வடசென்னை' படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது என்பதை சற்று முன்னர் பார்த்தோம். இந்த படத்திற்காக தயாராகவுள்ள ஜெயில் செட்டில் இன்றுமுதல் படப்பிடிப்பும் தொடங்குகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளதாக இயக்குனர் வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படம் மூன்று பாகங்களாக உருவாக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

இந்த படத்தின் கதை மிகவும் பெரியது என்பதால் இரண்டு பாகம் என்று திட்டமிட்டதை மூன்று பாகங்களாக மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ், சமந்தா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, சமந்தா, ஆண்ட்ரியா உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவுள்ள 'வடசென்னை' படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது என்பதை சற்று முன்னர் பார்த்தோம். இந்த படத்திற்காக தயாராகவுள்ள ஜெயில் செட்டில் இன்றுமுதல் படப்பிடிப்பும் தொடங்குகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளதாக இயக்குனர் வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படம் மூன்று பாகங்களாக உருவாக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

இந்த படத்தின் கதை மிகவும் பெரியது என்பதால் இரண்டு பாகம் என்று திட்டமிட்டதை மூன்று பாகங்களாக மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ், சமந்தா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, சமந்தா, ஆண்ட்ரியா உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.