ரிலீசுக்கு முந்தைய நாள் 'விடுதலை 2' படத்தில் வெற்றிமாறன் செய்த மாற்றம்: வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Thursday,December 19 2024]

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிய ‘விடுதலை 2’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து 8 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக வெற்றிமாறன் இன்று வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய வேடங்களில் நடித்து, இளையராஜா இசிஅயில் உருவான ‘விடுதலை 2’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக முழுவீச்சில் நடைபெற்றது. உலகம் முழுவதும் டிசம்பர் 20ஆம் தேதி அதாவது நாளை மிக பிரமாண்டமாக வெளியிடப்படவுள்ள இப்படம், சென்சார் பணிகள் முடிவடைந்த நிலையில் திடீரென கடைசி நேரத்தில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் வெற்றிமாறன் தனது வீடியோவில், கடைசி நிமிடத்தில் எட்டு நிமிட காட்சிகளை அகற்றியுள்ளோம். எங்கள் படக்குழுவினருக்கு இது ஒரு புதிதான அனுபவமாக அமைந்தது. இந்த பயணம் மிகப்பெரியது, மேலும் இதை உருவாக்க அனைவரின் பங்களிப்பும் முக்கியமானது.

எங்கள் முயற்சியில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. படம் எப்படி அமைந்திருக்கிறது என்பதை பார்வையாளர்களே சொல்ல வேண்டும். ஆனால், இந்த அனுபவம் எங்களுக்கு நிறையக் கற்றுத்தந்தது. தன்னலமின்றி உழைத்துள்ளோம், என்றும் கூறினார்.