வெற்றிமாறன் - ராகவா லாரன்ஸ் படத்தின் படப்பிடிப்பு எப்போது? சூப்பர் அப்டேட்
Send us your feedback to audioarticles@vaarta.com
வெற்றிமாறன் மற்றும் ராகவா லாரன்ஸ் இணையும் படம் குறித்த தகவலை கடந்த சில நாட்களுக்கு முன் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து சூப்பர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் கதையில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’அதிகாரம்’. இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ‘எதிர்நீச்சல்’, காக்கிச்சட்டை மற்றும் தனுஷின் ‘கொடி’ மற்றும் ‘பட்டாஸ்’ ஆகிய படங்களை இயக்கியுள்லார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஒரே நேரத்தில் பல மொழிகளில் பான் - இந்தியா படமாக உருவாக உள்ளது. தமன் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் கம்போசிங் பணியும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்று முன்னர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’அதிகாரம்’ படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் கூறியுள்ளார். மேலும் வெற்றிமாறன், துரை செந்தில்குமார் மற்றும் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் உடன் இணைந்த புகைப்படத்தையும் ராகவா லாரன்ஸ் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Planning for the shoot, Team #ADHIGAARAM. Will share the plans soon.@VetriMaaran @Dir_dsk @MusicThaman @kathiresan_offl @GrassRootFilmCo @5starcreationss @johnsoncinepro pic.twitter.com/zjRxh1yUWn
— Five Star Creations LLP (@5starcreationss) April 28, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com