வெற்றிமாறனுடன் இணைகிறாரா தளபதி விஜய்?

  • IndiaGlitz, [Friday,March 30 2018]

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. விஜய்யின் அடுத்த படத்தை இயக்க கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் விஜய்யை சந்தித்து ஒரு வரி கதையை கூறியதாகவும், இந்த கதை விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் 'தளபதி 63' அல்லது 'தளபதி 64' ஆக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவரும் வரை பொறுமை காப்போம்.

வெற்றிமாறன் தற்போது தனுஷ் நடித்துள்ள 'வடசென்னை' படத்தின் முதல் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகத்தை அவர் இயக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சந்தோஷ் நாராயணனுடன் கூட்டணி சேர்ந்த யுவன்ஷங்கர்ராஜா

ஒரே படத்திற்கு இரண்டு இசையமைப்பாளர்கள் இசையமைப்பது கோலிவுட் திரையுலகில் புதியது அல்ல. எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி, எம்.எஸ்,விஸ்வநாதன் - இளையராஜா, போன்றோர் ஒரே படத்தில் பணிபுரிந்துள்ளனர்.

தேசிய கட்சிகளுக்கு கூஜா தூக்கும் தமிழ் கட்சிகள்: நடிகை கஸ்தூரி

உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதற்கு முழுக்க முழுக்க கர்நாடக மாநில தேர்தல் தான் காரணம் என்பது தெரிந்ததே.

கபடி, கிரிக்கெட்டை அடுத்து கால்பந்தை கையில் எடுத்துள்ள சுசீந்திரன்

கபடியை மையமாக வைத்து 'வெண்ணிலா கபடிகுழு மற்றும் கிரிக்கெட்டை மையமாக வைத்து 'ஜீவா' ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன்

7 நாடுகளின் படங்களை பின்னுக்கு தள்ளிய தளபதியின் 'மெர்சல்'

பிரிட்டனின் 4வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் 'மெர்சல்' திரைப்படத்திற்கு சிறந்த வெளிநாட்டு மொழி படப் பிரிவில் விருது கிடைத்துள்ளது

ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த கமல்

ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இமயமலை சென்றபோது காவிரி பிரச்சனை குறித்த கேள்விகளை தவிர்த்துவிட்டு நழுவி சென்றார். இதுகுறித்து கமல் கூறியபோது 'அவர் , பல விஷயங்களில் நழுவித்தான் செல்கிறார்'