தனுஷ்-வெற்றிமாறனின் 'வடசென்னை 2' குறித்த முக்கிய தகவல்

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைப்பில் உருவாகிய ’பொல்லாதவன்’ மற்றும் ’ஆடுகளம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் மூன்றாம் முறையாக இருவரும் இணைந்த திரைப்படம் ‘வடசென்னை 2’. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘வடசென்னை 2’படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் உருவாகும் என்றும் ஏற்கனவே தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஒருசில பேட்டிகளில் கூறி இருந்தனர் என்றும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டதாக செய்திகளும் வெளியானது.

இந்த நிலையில் தற்போது சூரி நடிக்கும் படம் ஒன்றையும் சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ படத்தையும் வெற்றிமாறன் இயக்க திட்டமிட்டுருப்பதால் வெற்றிமாறன் படம் சில ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தனது பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் கூறியபோது, வெற்றிமாறன் படம் விரைவில் உருவாகும் என்றும், ஆனால் அந்த படத்தை தான் வெப்சீரிஸ்ஸாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் கூறினார். இருப்பினும் இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்

More News

கொரோனாவால் ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 19 லட்சம் மக்கள் இறக்க நேரிடும்!!! WHO கணிப்பு!!!

கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் கடும் அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகள்

ஊரே போராட்டம் செய்தும் மூட முடியாத மதுக்கடையை ஒரே ஒரு கொரோனா நோயாளி மூடிய அதிசயம்

http://www.puthiyathalaimurai.com/newsview/69960/corona-affect-person-buy-liquor-in-ariyalur-and-closed-tasmac

ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? கமல்ஹாசன் கேள்வி

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

கொரோனா நோயின் புதுப்புது அறிகுறிகள் என்ன??? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

கொரோனா பாதித்தவர்களுக்கு உடல் வெப்பநிலை அதிகரிப்பு,  சளி, காய்ச்சல், வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும் என உலகச் சுகாதார நிறுவனம் தெளிவு படுத்தியிருந்தது.

கொரோனா முடிந்தவுடன் இவரை கட்டிப்பிடிப்பேன்: இயக்குனர் சேரன்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து இயந்திரம் போல் இயங்கி வந்த மனிதர்கள் தற்போது முழு ஓய்வில் உள்ளனர்.