வெற்றிமாறனின் அடுத்த பட கதை இதுதான்
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் வெற்றிமாறன் நாவல்களை அடிப்படையாக வைத்து திரைப்படம் எடுப்பவர் என்பது அனைவரும் தெரிந்ததே. மு.சந்திரகுமார் எழுதிய லாக்கப்’ என்ற நாவலை ’விசாரணை’ என்ற படமாகவும், பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலை ’அசுரன்’ என்ற படமாகவும் வெற்றிமாறன் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மறைந்த கவிஞர் நா முத்துகுமார் கவிதை ஒன்றை திரைக்கதையை உருவாக்கி ஒரு படத்தை வெற்றிமாறன் இயக்கவிருப்பதாகவும், அதில் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அவரது முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது
மீரான் மைதீன் என்பவர் எழுதிய அஜ்னபி என்ற நாவலை மையமாக வைத்து தற்போது வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தான் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார். அரபு நாடுகளுக்கு பணி நிமித்தம் செல்லும் இந்தியர்களின் உணர்வுபூர்வமான நிகழ்வுகள்தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நாவலை படமாக்குவதற்காக அரபு நாடுகளான ஓமன், கத்தார், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் படப்பிடிப்பை நடத்த வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். மேலும் வெற்றிமாறன் வெளிநாட்டில் படமாக்கும் முதல் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை முடித்துவிட்டு அவர் சூர்யா நடிக்கவிருக்கும் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout