காதலை கொண்டாடும் ஆலன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. வெளியிட்டார் விஜய் சேதுபதி..!

  • IndiaGlitz, [Friday,December 15 2023]

3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடித்துள்ள மனதை மயக்கும் ரொமான்ஸ் டிராமா திரைப்படம் ஆலன். இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

தமிழில் முழுமையான காதல் படங்கள் வருவது மிகவும் அரிதாகிவிட்டது அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், ஒரு முழுமையான ரொமான்ஸ் வாழ்வின் அழகை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

ஆலன் என்பதன் பொருள் படைப்பாளி. சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகவும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராத நிகழ்வு. அவனின் காதல் 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் இப்படம்.

வாழ்வின் எதிராபார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம், காதல் ஆன்மீகம் எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் சிவா R.வித்தியாசமானதாக அமைந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ..

எட்டுத்தோட்டாக்கள் நாயகன் வெற்றி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த தபேயா மதுரா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கருணாகரன், விவேக் பிரசன்னா, அருவி மதன்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் கொடைக்கானல், ராமேஸ்வரம் முதலான பல இடங்களிலும், காசி, ரிஷிகேஷ் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்பொழுது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் ட்ரெய்லர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

More News

ஜோதிகா பட இயக்குனர் விவாகரத்து.. பிரிந்த மனைவியின் விளக்கம்..!

 ஜோதிகா நடித்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ள நிலையில் அவரது மனைவி இது குறித்து  தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.  

நடிகை ஜெயப்ரதாவுக்கு 6 மாத சிறை தண்டனை.. மேல்முறையீட்டில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

தொழிலாளர்களின் இஎஸ்ஐ பணத்தை முறைகேடு செய்ததாக நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில்

நிக்சன் - ஐஷு சீக்ரெட்டை உடைத்த மாயா.. நிக்சனின் ரியாக்சன் என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சி 7வது சீசன் தொடங்கி 75 நாட்கள் இன்று நிறைவு பெற்றதை அடுத்து, முதல் ப்ரோமோவில் அனைத்து போட்டியாளர்களும் ஸ்வீட் எடுத்து கொண்டாடியதை பார்த்தோம்

விஜய்யின் 'புலி'க்கு பின் சிம்புதேவனின் அடுத்த படம்.. டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

தளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவன்  8 ஆண்டுகளுக்கு பின் இயக்கிய திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி உள்ளது.  

இந்த வாரம் ஓடிடியில்  'கிடா' உள்பட 3 தமிழ் படங்கள்.. முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இன்று 'ஃபைட் கிளப்' உள்பட ஒரு சில படங்கள் வெளியாகி உள்ளன.